Monday, 14 March 2011





சின்னஞ் சிறு கிளி

http://www.facebook.com/video/video.php?v=187039901328701&comments




ஊழல் ஆட்சியை ஒழிக்க மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அரசியல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்.

தமிழகம் 05-03-2011 தகவல் ம.ஜ.இ.க நேசன்

சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் ஊழல் ஆட்சியைத் தூக்கி எறிவோம்,ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் தரும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம் என முழங்கி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பொதுக்கூட்டம்.
தமிழ்நாடு வேலூர் மாவட்டம் சுந்தரம்பள்ளிக் கிராமத்தில் இம்மாதம் 5ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஜீவா முன்னிலையில், வேலூர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் தோழர் க.குணாளன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தோழர்கள் மனோகரன், குணாளன், மாநில அமைப்பாளர் ஞானம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தருமபுரிமாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கலைமன்ற உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சி நிகழ்த்தினர்.

(படிக்க)  http://samaran1917.blogspot.com/2011/03/blog-post.html